நவோதய வித்யாலயா பள்ளிகளில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? - ஆசிரியர் மலர்

Latest

 




27/01/2022

நவோதய வித்யாலயா பள்ளிகளில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவோதய வித்யாலயா சமிதி பள்ளிகளில் காலியாக உள்ள 1925 ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள்: பணி: Assistant Commissioner (Group A) - 05 பணி: Assistant Commissioner (Admn) (Group A) - 02 பணி: Female Staff Nurse (Group B) - 82 பணி: Assistant Section Officer (Group C) - 10 பணி: Audit Assistant (Group C) - 11 பணி: Junior Translation Officer (Grop B) - 04 பணி: Junior Engineer (Civil) (Group C) - 01 பணி: Stenographer (Group C) - 22 பணி: Computer Operator (Group C) - 04 பணி: Catering Assistant (Group C) - 87 பணி: Junior Secretariat Assistant (Group C) - 08 பணி: Junior Secretariat Assistant - 622 பணி: Electrician Cum Plumber - 273 பணி: Lab Attendant (Group C) - 142 பணி: Mess Helper (Group C) - 629 பணி: Multi Tasking Staff (Group C) - 23 தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10, பிளஸ் 2 தேர்ச்சி, ஆங்கிலம், இந்தியில் தட்டச்சு முடித்தவர்கள், செவிலியர் டிப்ளமோ, இளநிலை, முதுநிலை பட்டம், பொறியியல் துறையில் பட்டம் பெற்று பணி அனுபவம் உள்ளவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விரிவான விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். தேர்வு செய்யப்படும் முறை: சிபிடி தேர்வு, நேர்முகத் தேர்வு, டிரேடு தேர்வு, திறன் தேர்வு, தட்டச்சு தேர்வு, சுருக்கெழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம்: மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் இரு பணிகளுக்கு ரூ.1,500, மூன்றாவது பணிக்கு ரூ.1,200, நான்கு முதல் 13 ஆவது பணிகளுக்கு ரூ.1000, 14,15 மற்றும் 16 ஆவது பணிகளுக்கு ரூ. 750 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. விண்ணப்பிக்கும் முறை: www.novodaya.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர்கள் அதனுடன் சான்றொப்பம் பெறப்பட்ட சான்றிதழ்கள் நகல்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2022 மேலும் விவரங்கள் அறிய file:///C:/Users/DOTCOM/Downloads/Z3DaG.pdf என்ற லிங்கில் செ்று தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459