கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - ஆசிரியர் மலர்

Latest

19/01/2022

கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

 ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்தில் 01.08 அன்றைய நிலவரப்படி அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10 வகுப்புகள் வரை உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் ( BT Staff Fixation ) பணியிடங்கள் நிர்ணயம் செய்வது நடைமுறையில் உள்ளது. 

அவ்வாறு மேற்படி பணியாளர் நிர்ணயம் 2021-22ம் கல்வியாண்டிற்கான 01.08.2021 அன்றைய நிலவரப்படி அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டது.


அதனடிப்படையில் இக்கல்வியாண்டில் ( 2021-22 ) அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மேற்படி பணியாளர் நிர்ணய கணக்கீட்டின்படி ( 6-8க்கு 1:35 என்ற விகிதாச்சாரப்படியும் 9-10க்கு விகிதாச்சாரப்படியும் ) 1:40 என்ற கூடுதல் தேவையுள்ள பள்ளிகள் ( Need Schools ) கண்டறியப்பட்டுள்ளது . கானலே , மேற்படி கூடுதல் பணியிடங்கள் தேவையுள்ள பள்ளிகளுக்கு மாணவர்களின் கல்வி நலன் கருதி இயக்குநரின் பொதுத் தொகுப்பில் உள்ள ஆசிரியரின்றி உபரிக்காலிப்பணியிடங்களை ( Surplus Post Without Person ) இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கு ( கூடுதல் தேவையுள்ள பள்ளிகள் ) அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது . மேற்படி கூடுதல் பணியிடங்கள் அனுமதித்து வழங்கப்பட்ட பள்ளிகளுக்கு சுற்றறிக்கை மூலம் தகவல் அளித்தும் , சம்மந்தப்பட்ட பள்ளியில் பராமரித்து வரும் அளவுகோல் பதிவேட்டில் ( Scale Register ) பதிவுகள் மேற்கொள்ளவும் , இப்பணியிடங்களை நிரப்பத்தகுந்த காலிப்பணியிடங்களாக கருதிட மேற்கொள்ளுமாறு அனைத்து அறிவுறுத்தப்படுகிறது.




No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459