12 முதல் 14 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி.. மத்திய அரசு அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


17/01/2022

12 முதல் 14 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி.. மத்திய அரசு அறிவிப்பு



இந்தியாவில் வரும் மார்ச் மாதத்திலிருந்து 12 முதல் 14 வயதுடையவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என தடுப்பூசி திட்டத்திற்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் மருத்துவர் என்கே அரோரா தெரிவித்துள்ளார்.கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி முதல் 15- 18 வயது பிரிவினருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அவர்களில் 7.4 கோடி பேரும் ஜனவரி இறுதிக்குள் முதல் டோஸை செலுத்திக் கொள்வார்கள். பின்னர் 28 நாட்கள் இடைவெளியில் பிப்ரவரி மாதம் இரண்டாவது தவணை தடுப்பூசியையும் செலுத்தி கொள்வார்கள்.இதனால் மார்ச் மாதம் முதல் 12 முதல் 14 வயதினருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கிறது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459