தாட்கோ திட்டத்தில் கடன் - SC, ST வகுப்பினருக்கு அழைப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

11/12/2021

தாட்கோ திட்டத்தில் கடன் - SC, ST வகுப்பினருக்கு அழைப்பு

சென்னை மாவட்டத்தில் வசிக்கும் பட்டியல் இனத்தவா் மற்றும் பழங்குடியினத்தவா் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் தொழில் முனைவோர் திட்டம், இளைஞா்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம் உள்ளிட்ட பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் பயனடைய தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது வரம்பு 18 முதல் 65 வரை. குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.2 லட்சம்.

பட்டியல் இனத்தவராக இருப்பின் http://application.tahdco.com/

பழங்குடியினராக இருப்பின் http://fast.tahdco.com/  
என்ற தாட்கோ இணையதள முகவரியில் குடும்ப அட்டை அல்லது இருப்பிடச் சான்று, ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, திட்ட அறிக்கை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வித் தகுதி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பதாரா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை 24 மணி நேரமும் பதிவு செய்யலாம்.மேலும், விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட மேலாளா், தாட்கோ அலுவலகத்தை அணுகலாம். 044 2524 6344, 94450 29456 ஆகிய எண்களையும் தொடா்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment