பொதுத் தேர்வுகள் நடைபெறுமா? - அமைச்சர் அன்பில் மகேஸ் பதில் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

09/12/2021

பொதுத் தேர்வுகள் நடைபெறுமா? - அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்

10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நிச்சயம் நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இன்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளி நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கெடுத்தார். அப்போது செய்தியாளர்கள், 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நடக்குமா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதில் அளித்துப் பேசும்போது, “10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கால அட்டவணைப்படி தேர்வுகள் நடத்தப்படும். இதில் எந்தக் குழப்பமும் வேண்டாம். பொதுத் தேர்வை ஏப்ரல் மாதம் நடத்துவதா அல்லது மே மாதம் நடத்துவதா என்று அப்போதுள்ள கரோனா தொற்றுச் சூழலைப் பொறுத்து முடிவு செய்யப்படும். பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இப்போதைக்கு மாணவர்களுக்கு நாங்கள் சொல்லிக்கொள்வது ஜனவரி, மார்ச் மாதம் நடைபெறும் திருப்புதல் தேர்வுக்குத் தயாராகிக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment