புதுச்சேரியில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு. - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

06/12/2021

புதுச்சேரியில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு.

புதுச்சேரியில் பல மாதங்களுக்கு பிறகு, 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று திறக்கப் படுகின்றன.ஒருநாள் விட்டு மறுநாள் வகுப்புகள் நடக்கும். 1,3,5,7 வகுப்புகள் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் நடக்கும். 2,4,6,8 வகுப்புகள் செவ்வாய், வியாழன், சனி கிழமைகளில் நடக்கும். அதனால், பள்ளிகள் அனைத்தும் வாரத்திற்கு ஐந்து நாட்களுக்கு பதிலாக, இனி ஆறு நாட்கள் செயல்படும். ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிகள் இனி முழு நேரமாக செயல்படும்.பள்ளிகளில் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கல்வியமைச்சர் நமச்சிவாயம் நேற்று கவர்னர் மாளிகைக்கு சென்று, கவர்னர் தமிழிசையை சந்தித்து பேசினார்.

No comments:

Post a Comment