இன்றைய ராசிபலன் - ஆசிரியர் மலர்

Latest

26/12/2021

இன்றைய ராசிபலன்

 : பிலவ வருடம் மார்கழி 11 ஆம் தேதி டிசம்பர் 26, 2021 ஞாயிற்றுக்கிழமை. சப்தமி இரவு 08.08 மணிவரை அதன் பின் அஷ்டமி. உத்திரம் மறுநாள் விடிகாலை 05.25 மணி வரை அதன் பின் ஹஸ்தம். சந்திரன் இன்றைய தினம் சிம்ம ராசியிலும் கன்னி ராசியிலும் பயணம் செய்கிறார். மகரம், கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.மேஷம்சந்திரன் சஞ்சாரத்தினால் இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பேச்சில் கவனமும் எச்சரிக்கையும் தேவை. வியாபாரத்தில் சின்ன மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது நம்பிக்கையையும் தெம்பையும் தரும். கடன் பிரச்சினை நீங்கும்.ரிஷபம்சந்திரன் சஞ்சாரம் இன்றைக்கு சாதகமாக உள்ளது. இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். எளிதில் முடிய வேண்டிய செயல்கள் கூட காலதாமதமாகும். வேலையில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். நோய்கள் நீங்கும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.மிதுனம்சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு தைரியம், சுக ஸ்தானங்களில் பயணம் செய்கிறார். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று நீங்கள் எந்த செயலையும் உற்சாகத்தோடு செய்வீர்கள். சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் அதிகரிக்கும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.கடகம்சந்திரன் பயணத்தினால் இன்று சந்தோஷ சம்பவங்கள் நடைபெறும். உற்சாகம் அதிகரிக்கும். பேச்சில் நிதானம் தேவை. இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும். வியாபார முதலீடுகளில் கவனம் தேவை. அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். உத்தியோக ரீதியான பயணங்கள் ஏற்படும்.சிம்மம்சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசியில் இருந்து இரண்டாம் வீட்டிற்கு பயணம் செய்கிறார். இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். உடல் நிலை தெம்புடன் காணப்படும். இன்றைக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நன்மைகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் வங்கி சேமிப்பு உயரும்.கன்னிசந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்குள் வருகிறார். இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். எடுக்கும் புதிய முயற்சிகளில் தாமதப் பலன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவியால் ஓரளவு பிரச்சினைகள் குறையும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பேச்சில் நிதானம் தேவை. கோபம் தவிர்க்கவும்.துலாம்சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றி தரும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். உணவு விசயத்தில் கவனம் தேவை. செய்யும் தொழிலில் நண்பர்களின் ஒத்துழைப்பால் நன்மைகள் நடைபெறும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும்.விருச்சிகம்சந்திரன் இன்றைய தினம் சாதகமாக பயணம் செய்கிறார். உங்களுக்கு மன நிம்மதி அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். வேலையில் இருப்பவர்களுக்கு அவர்களின் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.தனுசுசந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. இன்று பிள்ளைகளின் படிப்பிற்காக சிறு தொகை செலவு செய்வீர்கள். திருமண முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். திடீர் செலவுகள் வரும். வங்கி சேமிப்பு குறையும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். வீண் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமுடன் செலவு செய்தால் கடன் பிரச்சினை குறையும். ஆலய வழிபாடு மன அமைதியை தரும்.மகரம்சந்திரன் உங்களுடைய ராசிக்கு 11 மணி வரை எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். பிற்பகல் 11 மணி வரை உங்களுடைய ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது சிறப்பு. சுபகாரியங்களை தவிர்க்கவும்.கும்பம்சந்திரன் உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டிலும் எட்டாம் இடத்திலும் சஞ்சரிக்கிறார். இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். 11 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். பெரிய அளவில் பண முதலீடுகள் வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.மீனம்சந்திரன் உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டிலும் ஏழாம் வீட்டிலும் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் தேடி வரும். இன்றைய தினம் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். பொருளாதார நிலை உயரும். கடன் பிரச்சினைகள் தீரும். பெண்களுக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.அக்டோபர் மாத ராசி பலன்2021:துலாம்,விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சோதனைகளும் சாதனைகளும் நிறைந்த மாதம்அக்டோபர் மாத ராசி பலன் 2021: இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கப்போகிறதுஅக்டோபர் மாத ராசி பலன் 2021: மேஷம், ரிஷப ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த மாதம்புரட்டாசி மாத ராசிபலன்கள் 2021: துலாம், விருச்சிகம்,தனுசு ராசிக்காரர்களுக்கு அற்புதங்கள் நிகழும்புரட்டாசி மாத ராசிபலன்கள் 2021: மகரம், கும்பம்,மீனம் ராசிக்காரர்களுக்கு நன்மைகள் தேடி வரும்புரட்டாசி மாத ராசிபலன்கள் 2021: இந்த 3 ராசிக்காரர்களுக்கும் திடீர் யோகங்கள் தேடி வரும்புரட்டாசி மாத ராசிபலன்கள் 2021: ரிஷப ராசிக்காரர்களே நினைத்த காரியம் நிறைவேறும்புரட்டாசி மாத ராசிபலன்கள் 2021: மேஷ ராசிக்காரர்களே வேலையில் கவனம் தேவைஆகஸ்ட் மாத ராசி பலன் 2021: மகரம், கும்பம், மீன ராசிக்காரர்கள் சவால்களை சந்திப்பீர்கள்ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டகரமான மாதம்ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021: சிம்மம், கன்னிராசிக்காரர்களுக்கு யோகங்கள் நிறைந்த மாதம்ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021: கடக ராசிக்காரர்களுக்கு கவலைகள் தீரும் காலம்'

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459