கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இனி செமஸ்டர் தேர்வை நேரடியாகவே நடத்த வேண்டும்; யுஜிசி அறிவிப்பு.! - ஆசிரியர் மலர்

Latest

 




 


13/12/2021

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இனி செமஸ்டர் தேர்வை நேரடியாகவே நடத்த வேண்டும்; யுஜிசி அறிவிப்பு.!

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இனி செமஸ்டர் தேர்வை நேரடியாகவே நடத்த வேண்டும் என்று யுஜிசி அறிவித்துள்ளது. அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழக மானிய குழு செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் கடிதம் அனுப்பியுள்ளார். நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் தேர்வுகள் இனி ஆன்லைன் முறையில் கிடையாது என்றும் மாறாக, இனி நேரடியாக எழுத்து தேர்வாகவே நடத்தப்பட வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. மேலும்,கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது.அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் தனது கடிதம் மூலம் இதனை அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459