400 பள்ளிகளை தரம் உயர்த்த 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு.. அமைச்சர் அன்பில் மகேஷ். - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

19/12/2021

400 பள்ளிகளை தரம் உயர்த்த 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு.. அமைச்சர் அன்பில் மகேஷ்.

 திருச்சி : தமிழ்நாட்டில் சேதமடைந்த பள்ளிகளை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளின் கட்டிடத் தன்மையை ஆய்வு செய்து வருவதாகவும் தரமற்ற கட்டிடங்கள் இருந்தால் அதை இடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.தற்போது வரை 400 பள்ளிகளை இடித்து அதன் தரத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு 250 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் சாப்டர் எனும் தனியார் பள்ளியில் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மாணவர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்படும் எனவும் இனி வரும் காலங்களில் விபத்துகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருந்தார். மேலும் விபத்தில் பலியான மாணவர்கள் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா 3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். பள்ளியில் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் கழிப்பறையின் சுற்றுச்சுவர் அடித்தளம் இல்லாமாலே அமைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டிஇந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு: "தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. எந்தெந்த கட்டிடங்களை சேதம் அடைந்துள்ளதோ அவற்றை உடனடியாக இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சேதமடைந்த கட்டிடங்கள் இடித்துவிட்டு புதிய கட்டிடம் திறக்கும் வரை மாணவர்களுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்படும். ஒருவேளை அருகில் உள்ள பள்ளிகளில் இடம் இல்லை என்றால் பொதுவான இடங்களை வாடகைக்கு எடுத்து கற்றல் இடைவெளி இல்லாத அளவுக்கு வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்250 கோடி ரூபாய் ஒதுக்கீடுஇது சம்பந்தமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் பேசி உள்ளோம். இதுவரை சேதம் அடைந்து உள்ளதாக 410 பள்ளிகள் கணக்கெடுக்கப்பட்டு இருக்கிறது. நெல்லையில் பள்ளிக் கட்டிடம் இடிந்தது வருந்தத் தக்க விஷயம்தான். இதுபோன்று கண்டிப்பாக நிகழ்ந்திருக்கக்கூடாது. மதுரை, திருநெல்வலி, புதுக்கோட்டை, திருச்சி உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பழுதடைந்து உள்ள கட்டிடங்கள் எவை இருக்கின்றவோ அவை எல்லாம் ஆய்வு செய்யப்பட்டு அதை இடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை பள்ளிக்கல்வித்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நகர்ப்புறம் ஊரக வளர்ச்சித்துறைகளில் உள்ள அதிகாரிகளை கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டு பழுதடைந்த கட்டிடங்களை ஆய்வு செய்து இடித்துத் தள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.திமுக ஆட்சியில் கல்விக்கு அதிக நிதிமுதற்கட்டமாக மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ள கட்டிடங்கள் எதை எல்லாம் உடனடியாக இடிக்க வேண்டுமோ அதை இடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது பள்ளிக் கல்வித்துறைக்கு கடந்த ஆண்டு 75 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது திமுக அரசு அமைந்த பிறகு பள்ளிக் கல்வித்துறைக்கென 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நிறைய பள்ளிகளில் உள்ள கழிவறைகளில் சீரமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. நெல்லையில் பள்ளியில் நடந்த விபத்துக் கூட கழிவறை முன்னர் இருந்த சுற்றுச்சுவர்தான் இடிந்து விழுந்துள்ளது. எனவே கழிவறைக் கட்டிடங்களில் பாதிப்பு இருந்தால் அதையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்

No comments:

Post a Comment