ஓமிக்ரான் - இந்தியாவில் பிப்ரவரியில் நிச்சயம் 3ஆம் அலை - எச்சரிக்கும் நிபுணர் குழு - ஆசிரியர் மலர்

Latest

 




 


18/12/2021

ஓமிக்ரான் - இந்தியாவில் பிப்ரவரியில் நிச்சயம் 3ஆம் அலை - எச்சரிக்கும் நிபுணர் குழு

 இந்தியாவில் ஓமிக்ரான் வகை மாறுபாடு கொரோனா வைரஸ் காரணமாக பிப்ரவரி மாதத்தில் மூன்றாவது அலை நிச்சயம் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் பரவத் தொடங்கியது. இதன் காரணமாக 7 மாதங்களுக்கு மேலாக பாதிப்பு இருந்தது. இந்த வருடம் இரண்டாவது அலை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட போதும் கடந்த ஆண்டைவிட உயிரிழப்புகள் சற்று அதிகமாகவே இருந்தது.டெல்டா, டெல்டா ப்ளஸ் , ஆல்பா என அடுத்தடுத்து புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் என்ற உருமாறிய புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டது. அடேங்கப்பா.. மூன்றே நாளில் இரட்டிப்பாக பரவுகிறதாம் ஓமிக்ரான் வைரஸ்! அலர்ட் கொடுக்கும்ஓமிக்ரான் பாதிப்புஅதே வேகத்தில் இஸ்ரேல் ஆஸ்திரேலியா நியூசிலாந்து என பல்வேறு நாடுகளுக்கும் பரவிய வைரஸ் தற்போது இந்தியாவில் பரவியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்திலும் இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.கொரோனா 3வது அலைஇந்நிலையில் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது . சென்னையில் ஒரு நாளைக்கு 600 பேர் வரை மட்டுமே பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் ஓமிக்ரான் வைரஸ் பரவல் மூலமாக மூன்றாவது அலை நிச்சயம் ஏற்படும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.சூப்பர் மாடல் குழுஇது குறித்து பேசிய தேசிய கொரோனா சூப்பர் மாடல் குழுவின் தலைவர் வித்யாசாகர் , அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மூன்றாவது அலை நிச்சயம் ஏற்படக்கூடும் என தெரிவித்தார் .மேலும் தற்போது தடுப்பூசி பயன்பாடு மற்றும் இயற்கையான மாறுபாடு காரணமாக மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் ஏற்பட்டுள்ளது என்றும், அதனால் இரண்டாவது அலையை விட இந்த அலை லேசான பாதிப்புகளையே ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.அதேநேரத்தில் நாட்டில் நிச்சயம் மூன்றாவது அலை ஏற்படும் என்றும் கூறினர்.முகக்கவசம் அவசியம்தற்போது நாளொன்றுக்கு 7500 வரை கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் டெல்டாவுக்கு பதிலாக ஓமிக்ரான் பாதிப்பு வரும் போது இந்த எண்ணிக்கை உயர போவது உறுதி எனவும் அவர் கூறியுள்ளார். எனவே மக்கள் பொறுப்புணர்வோடு செயல்பட்டு தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது மற்றும் சானிடைசர் உபயோகம் ஆகியவற்றை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459