அதிர்ச்சி.. தமிழ்நாட்டில் திடீரென 33 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு.. பாதிப்பு எண்ணிக்கை 34 ஆக உயர்வு - ஆசிரியர் மலர்

Latest

 




 


23/12/2021

அதிர்ச்சி.. தமிழ்நாட்டில் திடீரென 33 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு.. பாதிப்பு எண்ணிக்கை 34 ஆக உயர்வு


 தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை விரைவில் அறிக்கை வெளியிட்டு உள்ளது.ஏற்கனவே தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது . இதன் காரணமாக ஓமிக்ரான் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் தமிழகம் தற்போது 3வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 245 பேருக்கும் அதிகமானோருக்கு தற்போது ஓமிக்ரான் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் ஓமிக்ரான் கேஸ்கள் அதிக அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.நைஜீரியா பயணிதமிழ்நாட்டில் ஏற்கனவே 1 ஓமிக்ரான் கேஸ் கடந்த வாரம் பதிவானது. இவர் நைஜீரியாவில் இருந்து தமிழ்நாடு வந்த பயணி. அவர் நல்ல உடல்நிலையில் இருக்கிறார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கு கொரோனா இருந்தது.அறிகுறிஇதுபோக வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த 104 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்களில் 57 நபர்களுக்கு ஓமிக்ரான் அறிகுறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது இவர்களுக்கு எஸ் ஜீன் இல்லை. இந்தியாவில் பொதுவாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சோதனை செய்யும் போது அவர்களின் மாதிரிகளில் குறிப்பிட்ட சில ஜீன்கள் இருக்கிறதா என்று சோதனை செய்வார்கள்.எஸ் ஜீன்அதாவது கொரோனாவில் இருக்கும் , ,மற்றும்போன்ற ஜீன்கள் நோயாளியின் மாதிரியில் இருக்கிறதா என்று சோதனை செய்வார்கள். இதில் எஸ் ஜீன் இல்லாதபட்சத்தில் அது ஓமிக்ரான் சந்தேக கேஸ்களாக பார்க்கப்படும். இவர்கள் உடனே தனிமைப்படுத்தப்படுவார்கள். இவர்களுக்கு ஜீன் சோதனை செய்யப்படும்.எத்தனை பேர்தமிழ்நாட்டில் 57 பேர் எஸ் ஜீன் இல்லாமல் இப்படி தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களின் ஜீன் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில், இதில் 33 பேருக்கு ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டு ஜீன் முடிவுகள் வெளியாகி உள்ளது. இன்று மொத்தமாக 34 பேரின் முடிவுகள் வெளியான நிலையில் 33 பேருக்கு ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் அறிகுறி இல்லாத நோயாளிகள்.20 பேர்இதனால் தமிழ்நாட்டில் ஓமிக்ரான் பாதிப்பு 34 ஆக உயர்ந்துள்ளது. இதுபோக கூடுதலாக 20 பேரின் ஜீன் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஓமிக்ரான் உள்ளதா என்ற அறிவிப்பு ஜீன் முடிவு வெளியான பின் தெரிய வரும்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459