நீட் தேர்வு.. தமிழகத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் முறைகேடு.. லோக்சபாவில் மத்திய அரசு தகவல் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

04/12/2021

நீட் தேர்வு.. தமிழகத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் முறைகேடு.. லோக்சபாவில் மத்திய அரசு தகவல்

 நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக நடப்பு கல்வியாண்டில் 15 மாணவர்களை தகுதி நீக்கம் செய்யப்பட்டனர் என்று, லோக்சபாவில் இன்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நீட் நுழைவுத்தேர்வுக்கு தமிழகத்தில் விலக்கு அளிக்க வேண்டும் என்பது தொடர் கோரிக்கையாக இருந்து வருகிரது.ஆனால், இடைநிலைக் கல்வி வாரியம், இதில் உறுதி காட்டுகிறது. தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவில்லை. இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 12ம் தேதி நடைபெற்றது.தமிழகத்தில் நீட்இதில் நாடு முழுவதும் 15.44 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நீட் தேர்வு எழுதி, தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் 1ம் தேதி வெளியானது. இந்த நிலையில்தான் நீட் தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.முறைகேடு புகார்கள்நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டிருந்ததாக, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 8 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்திலும் 15 பேர் நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக லோக்சபாவில் மத்திய அரசு தரப்பு இன்று தெரிவித்துள்ளது.தமிழக நிலவரம்இவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாம். 2019ம் ஆண்டில் 4 பெரும், 2020ம் ஆண்டு 5 பெரும் முறைகேட்டில் ஈடுபட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டது. தற்போது 15 பேர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்ப்டடுள்ளது.பல வகைஆள் மாறாட்டம் செய்வது, வினாத்தாள்களை திருடுவது, விடைத்தாள்களில் திருத்தங்களையும் முறைகேடாக மேற்கொள்வது. ஓஎம்ஆர் விடைத்தாள்களை மாற்றி வைப்பது என்று, முறைகேடுகள் பல வகைகளில் உள்ளன. இதுகுறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து ஏராளமானோரை கைது செய்துள்ளது

No comments:

Post a Comment