முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட பயனாளிகளுக்கான வருமான வரம்பு ரூ.1.20 லட்சமாக உயர்வு.! தமிழக அரசு உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

 




 


21/12/2021

முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட பயனாளிகளுக்கான வருமான வரம்பு ரூ.1.20 லட்சமாக உயர்வு.! தமிழக அரசு உத்தரவு.

முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட பயனாளிகளுக்கான வருமான வரம்பு ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டு வருமான வரம்பை ரூ.72,000ல் இருந்து ரூ.1.20 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்டமருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாக கட்டணமில்லாமல் வழங்குதல்.


அனைவருக்கும் சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற ஆண்டு வருமான வரம்பு 1.20 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடபட்டுள்ளது. மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பயனாளிகளுக்கான காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சமாக ஏற்கனவே உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459