மத்திய அரசு வேலை வாய்ப்பு கடைசி தேதி 02.01.22 - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

30/12/2021

மத்திய அரசு வேலை வாய்ப்பு கடைசி தேதி 02.01.22

 சென்னை: மத்திய அரசு நிறுவனமான பிரம்மபுத்ரா கிராக்கர் அண்ட் பாலிமர் லிமிடெட் எனப்படும் பிசிபிஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் பெட்ரோலிய துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனம் பிசிபிஎல் எனப்படும் பிரம்மபுத்ரா கிராக்கர் அண்ட் பாலிமர் லிமிடெட். அசாமை தலைமையிடமாகக் கொண்டுள்ள இந்த நிறுவனம் பாலிமர் தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றன.

பிசிபிஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.


மொத்த காலியிடங்கள்: 36


பணி வாரியாக


துணை பொது மேலாளர் - 02 பணியிடங்கள்


தலைமை மேலாளர் - 01 பணியிடங்கள்


சீனியர் மேலாளர் - 05 பணியிடங்கள்


மேலாளர் - 03 பணியிடங்கள்


துணை மேலாளர் - 25 பணியிடங்கள்


சம்பளம்: ஒவ்வொரு பணியிடத்திற்கும் ஒவ்வொரு ஊதியம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாகத் துணை பொது மேலாளர் பணியிடத்திற்கு ரூ 66 ஆயிரம் வழங்கப்படும்.

தகுதி: ஒவ்வொரு பணியிடத்திற்கும் அதற்கென தனியாகக் கல்வித் தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான காலியிடங்களுக்கு பிஇ/ பிடெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


தேர்வு செய்யப்படும் முறை - எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் பணியிடங்கள் நிரப்பப்படும்

கடைசி தேதி - ஜனவரி 2, 2022

கூடுதல் தகவல்களுக்கு click here

 Apply : click hereNo comments:

Post a Comment