Polytechnic TRB Online Exam Time Table 2021 - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

 




11/11/2021

Polytechnic TRB Online Exam Time Table 2021 - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு


அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண் .14 / 2019 , நாள் 27.11.2019 அன்று வெளியிட்டது. அரசு பல்தொழில்நுட்ப கல்லுாரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கான கணினி வழி போட்டித் தேர்விற்கான கால அட்டவணை ( Schedule ) டிசம்பர் மாதம் 08 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று 10.11.2021 வெளியிடப்படுகின்றது. இத்தேர்விற்கான தேர்வர்களுக்குரிய அனுமதி சீட்டு ( Admit Card ) தேர்விற்கு முந்தைய வாரத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படுகின்றது. இத்தேதிகள் பெருந்தொற்று சூழ்நிலை தேர்வு மையங்களின் தயார் நிலை ( Availabiliry of Examininion Centre ) மற்றும் நிர்வாக வசதியினை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது எனவும் அறிவிக்கப்படுகின்றது.
Polytechnic Lecturers Computer Based Examination Schedule



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459