மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் b.ed தொலைநிலை கல்வியில் படித்தவர்களுக்கு அது ஆங்கில வழி., எனவே அதற்கு தமிழ்வழி சான்று தர இயலாது என்று பல்கலைக்கழகத்தில் கூறுகிறார்கள். ஆனால் நேரடியாக கல்லூரியில் படித்தவர்களுக்கு தமிழ் வழி கல்வி சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். தொலைநிலை கல்வியை அரசு பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்டிருக்கும்பொழு
தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு, அந்த தமிழ் மொழியை எப்படி ஆங்கில மொழி மூலம் கற்றிருக்க முடியும் ? தமிழர்களுக்கு தமிழ் மொழியை எப்படி பயிற்றுவிக்க வேண்டும் என்று தமிழ் மொழி மூலம் தான் கற்பிக்க முடியும். வேண்டுமானால் இயற்பியல் பாடத்தை எப்படி பயிற்றுவிப்பது என்பதை ஆங்கில மூலமாக கற்பிக்கலாம்.
இந்த சிக்கலினால், தமிழ் பயின்றவர்கள் இச்சலுகையை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.
இப்படி ஒரு சிக்கல் உள்ளது அரசிற்கு ஏதாவது ஒரு முறையில் தெரியப்படுத்த வேண்டும். டி ஆர் பி விண்ணப்பிக்கும் மென் பொருளிலும் சிறு மாற்றம் செய்ய வேண்டும். இதனை ஒன்று பல்கலைக்கழகங்களுக்கு அறிவிப்பு கொடுத்தோ அல்லது டிஆர்பி விண்ணப்பங்களில் விதிமுறைகளில் மாற்றம் செய்தோ நெறிப்படுத்த வேண்டும்.
தயவுகூர்ந்து இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கு, அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்வர்கள் தவிப்பில் காத்திருக்கிறார்கள்.
மேலும் 50 வயது வரம்பில் சலுகை அளித்த பிறகும், 1976க்கு பிறகு பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்குமாறு உள்ளது. இன்னும் மென்பொருளில் மாற்றம் செய்யப்படவில்லை. நவம்பர் 9ம் தேதி வரையே கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை எடுக்குமா அரசு ?
பொன். சங்கர்
திருப்பூர்
No comments:
Post a Comment