அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளுக்கான முதல் பருவ பாடத்திட்டம் இணையதளத்தில் பதிவேற்றம் பதிவாளர் தகவல் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

27/11/2021

அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளுக்கான முதல் பருவ பாடத்திட்டம் இணையதளத்தில் பதிவேற்றம் பதிவாளர் தகவல்

அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளுக்கான முதல் பருவ பாடத்திட்டம் இணையதளத்தில் பதிவேற்றம் பதிவாளர் தகவல் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) ஞானதேவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- 

தமிழக அரசின் உயர்கல்வித்துறை ஆணைப்படி அண்ணாமலை பல்கலைக்கழகம் இணைவு பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டு கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. 

2021-22-ம் கல்வியாண்டில் மேலே குறிப்பிடப்பட்ட மாவட்டங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட முதலாமாண்டு மாணவர்களுக்கான முதல் பருவ பாட திட்டம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அனைத்துக் கல்லூரிகளிலும் அதே பாடத் திட்டத்தை பின்பற்றுமாறு பல்கலைக்கழகம் கேட்டுக்கொள்கிறது. முதலாமாண்டு மாணவர்களுக்கான 2-ம் பருவத்திற்கான பாடத்திட்டம் விரைவில் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் முதலாமாண்டு மாணவா்கள் முதல் பருவ பாட திட்டத்தை பல்கலைக்கழகத்தின் 
https://annamalaiuniversity.ac.in/affcl/syllabus.php என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment