கருணை அடிப்படையில் வேலை - உச்ச நீதிமன்றத்தின் புதிய உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

21/11/2021

கருணை அடிப்படையில் வேலை - உச்ச நீதிமன்றத்தின் புதிய உத்தரவு.

 

.com/

‘நீண்ட தாமதத்திற்குப் பிறகு, கருணை அடிப்படையில் வேலை வழங்கக் கோருவதை ஏற்க முடியாது’ என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுத்துறை நிறுவனமான செயில் நிறுவன ஊழியர் ஒருவர் கடந்த 1977ம் ஆண்டு காலமானார். அவருக்குப் பிறகு கருணை அடிப்படையில் தனக்கு வேலை வழங்கக் கோரி, அவரது முதல் மகன் 1977ம் ஆண்டிலேயே செயில் நிர்வாகத்திடம் விண்ணப்பித்துள்ளார். அப்போதைய கொள்கை, விதிகளின்படி அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதன் பின், 18 ஆண்டுகள் கழித்து, இறந்த செயில் ஊழியரின் 2வது மகன் தனக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கக் கோரி ஒடிசா உயர் நீதிமன்றத்தை நாடி உள்ளார். அவருக்கு பணி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற தீர்ப்பை ஒன்றிய நிர்வாக தீர்ப்பாயமும் உறுதி செய்தது.


இதை எதிர்த்து செயில் நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சஞ்ஜிவ் கண்ணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘கருணை அடிப்படையில் பணி கோருவதில் தாமதம் ஏற்பட்டால், இறந்த ஊழியரின் குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணம் வழங்கும் நோக்கமே அடிபட்டுப் போகிறது. எனவே, தாமதமாக விண்ணப்பித்த காரணத்திற்காக கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற சம்மந்தப்பட்ட அந்த நபருக்கு உரிமை இல்லை. இந்த விவகாரத்தில் செயில் நிர்வாகம் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்குகிறோம். தீர்ப்பாயம் இந்த மனுவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,’ என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459