3 வேளாண் சட்டங்களும் வாபஸ் - மத்திய அரசு - ஆசிரியர் மலர்

Latest

19/11/2021

3 வேளாண் சட்டங்களும் வாபஸ் - மத்திய அரசு

 சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார்.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின்போது இந்த மூன்று சட்டங்களும் வாபஸ் பெறப்படும் என்று உறுதி அளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள் தங்கள் போராட்டங்களை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.பிரதமர் மோடி இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடையே நேரலையில் உரையாற்றஇனார். தனது உரையின்போது அவர் தெரிவித்ததாவது: நாடாளுமன்றம், சட்டசபையில் அரசியல் இல்லாத ஆரோக்கியமான விவாதங்களுக்கு தனி நேரம்: பிரதமர் மோடி யோசனைவிவசாயிகளுக்கு சேவைவிவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களை நான் பார்த்திருக்கிறேன். நம் நாட்டில் 100 விவசாயிகளில் 80 பேர் சிறு விவசாயிகள், 2 ஏக்கருக்கும் குறைவான நிலமே அவர்களிடம் உள்ளது. விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களை நான் உணர்ந்துள்ளேன். விவசாயிகளுக்கு சேவை செய்வதே எங்கள் அரசின் நோக்கம்.விலை கிடைக்கும்விவசாயிகளின் நலனை காக்கதான் 3 விவசாய சட்டங்களை கொண்டு வந்தோம். வேளாண் விலை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்துள்ளோம். விவசாயிகள் நலன் சார்ந்த நிதி ஒதுக்கீடு 5 மடங்கு அதிகரித்துள்ளது.3 வேளாண் சட்டங்கள் வாபஸ்அதேநேரம், வேளாண் சட்டங்களின் நலன்களை ஒரு தரப்பு விவசாயிகளுக்கு புரிய வைப்பதில் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. எனவே 3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்று நான் அறிவிக்கிறேன். இந்த குளிர்கால கூட்டத்தொடரின் போது இந்த மூன்று சட்டங்களும் வாபஸ் பெறப்படும் எனவே டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை உடனடியாக கைவிடும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.ஓராண்டு போராட்டம்கடந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடரின் போது தான் 3 வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் இது பெரும் தொழிலதிபர்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் சிறு குறு விவசாயிகளுக்கு பாதகமாக இருப்பதாகவும் கூறி கிட்டத்தட்ட ஓராண்டாக தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.5 மாநில தேர்தல்கள்இந்த நிலையில்தான் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கெல்லாம் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்பதால் பாஜக வெற்றி பெறுவதற்கு மிகவும் சிரமம் என்று தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். போராடிக் கொண்டிருந்த விவசாயிகள் இந்த அறிவிப்புக்கு உற்சாக வரவேற்பு தெரிவித்துள்ளனர். குருநானக் பிறந்த நாள் விழா தினத்தின்போது பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் பஞ்சாப் உற்சாக வெள்ளத்தில் மிதக்கிறது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459