23.11.2021 அன்று நடைபெறவுள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் தொடக்கக் கல்வி இயக்ககம் சார்ந்து விவாதிக்கப்பட வேண்டிய கூட்டப் பொருள் - ஆசிரியர் மலர்

Latest

 




16/11/2021

23.11.2021 அன்று நடைபெறவுள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் தொடக்கக் கல்வி இயக்ககம் சார்ந்து விவாதிக்கப்பட வேண்டிய கூட்டப் பொருள்


23.11.2021 அன்று நடைபெறவுள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் தொடக்கக் கல்வி இயக்ககம் சார்ந்து விவாதிக்கப்பட வேண்டிய கூட்டப் பொருள் :


 1. நீதிமன்ற வழக்கு சார்ந்த விவரங்கள் - Contempt Petitions , SLP ( படிவம் - 1 & 2 ) 



2. விலையில்லா கல்வி உபகரணப் பொருட்கள் புத்தகப்பை , கிரையான்ஸ் , வண்ணப் பென்சில்கள் , கணித உபகரண பெட்டி , காலணிகள் மற்றும் காலேந்திகள் , ( கம்பளிச் சட்டை , மழைக்கோட்டு , ஆங்கிள் பூட் - மலை பிரதேசங்களில் உள்ள 16 மாவட்டங்கள் ) 2021 - 22 ஆம் கல்வியாண்டிற்குரிய கல்வி உபகரணப் பொருட்கள் வழங்கப்பட்ட விவரம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் கையொப்பத்துடன் அளிக்கப்பட வேண்டும் 



3.2020-21ஆம் கல்வி ஆண்டில் RTE 25 % இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் திரும்ப வழங்குவதற்கு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளிலிருந்து வங்கி கணக்கு விபரங்களைப் பெற்று சரிபார்த்து EMIS- ல் பதிவேற்றம் செய்யப்பட்டது குறித்த விவரம் 



4. 01.08.2021 தேதிய நிலவரப்படி அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் நிர்ணயம் செய்த விவரம் 



5.ஆசிரியர் வருங்கால வைப்பு நிதி ( TPF ) விடுபட்ட வரவுகளை ( Missing Credits ) சரிசெய்து மாநில கணக்காயருக்கு அனுப்பிவிட்டு அதன் நகல் இவ்வியக்ககத்திற்கு அனுப்பப்பட வேண்டும் . ( அரியலூர் , செங்கல்பட்டு , காஞ்சிபுரம் , கிருஷ்ணகிரி , புதுக்கோட்டை . , ராணிப்பேட்டை , ராமநாதபுரம் , சிவகங்கை , திருச்சி , திருப்பூர் , தூத்துக்குடி , தென்காசி , திருநெல்வேலி மற்றும் விழுப்புரம் ஆக மாவட்டங்களில் இருந்து விவரங்கள் வழங்கப்பட வேண்டும்.



6.நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2021-2022ஆம் ஆண்டு மாணாக்கர் எண்ணிக்கையின்படி ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்த விவரம் ( உரிய படிவங்களில் ) 



7. அக்டோபர் 2021 ல் பார்வையிடப்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் விவரம் ( படிவம் -3 ) 



8. மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் வகுப்பறைகள் தேவை விவரம் ( படிவம் 4 ) 



9. பள்ளி சுற்றுச் சுவர் தேவை சார்ந்த விவரம் ( படிவம் -5 ) 



10.இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் சார்ந்த விவரம் ( படிவம் -6 ) 



11.முதன்மைக் கல்வி அலுவலகம் , மாவட்டக் கல்வி அலுவலகம் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகங்களில் பராமரிக்கப்படும் வங்கி கணக்குகள் சார்பான விவரம் . ( விருதுநகர் , அரியலூர் , சிவகங்கை , காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்கள் தவிர்த்து )

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459