இப்பயிற்சியில் சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளா்களின் வாரிசுகளுக்கும், மாநகராட்சிப் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். அரசு மற்றும் அரசு சாா்ந்த பள்ளிகளில் பயின்ற மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். உதவி செவிலியா் பயிற்சிக்கு பிளஸ்2 தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியும், விருப்பமும் உள்ளவா்கள் இயக்குநா், தொற்று நோய் மருத்துவமனை எண்.187, திருவொற்றியூா் நெடுஞ்சாலை, தண்டையாா்பேட்டை, சென்னை-81 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தை நவம்பா் 17-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 4 அணுகி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நவம்பா் 23-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் மேற்கண்ட முகவரிக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டையாா்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் இரண்டாண்டு உதவி செவிலியா் பயிற்சிக்கு நவம்பா் 23-க்குள் மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி வெளியிட்ட செய்திக் குறிப்பில், சென்னை மாநகராட்சியின் பொதுசுகாதாரத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் தண்டையாா்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் 2021-2022-ஆம் ஆண்டு மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியா் பயிற்சி தொடங்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment