அடுத்த 2 நாட்களுக்கு மழை வெளுக்கும்.. தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களுக்கு தீவிர கனமழை எச்சரிக்கை! - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

08/11/2021

அடுத்த 2 நாட்களுக்கு மழை வெளுக்கும்.. தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களுக்கு தீவிர கனமழை எச்சரிக்கை!

சென்னை; தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இன்னொரு பக்கம் வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும் மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு வாரமாக கடலோர மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்து வந்தது.இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு முழுக்க பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருகிறது. தொடர் மழை எதிரொலி.. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறைதாழ்வு பகுதிதென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை அல்லது நாளை மறுநாள் முழுமையாக உருவாகும். இதனால் வரும் நாட்களில் மழை குறைவதற்கு பதிலாக அதிகரிக்கும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற்றம் அடையும் வாய்ப்புகளும் உள்ளன. இதனால் தமிழ்நாட்டில் இப்போது கனமழை விட வாய்ப்பு இல்லை.இரண்டு நாட்கள்சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளை அதி தீவிர கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் இன்று அதிகாலையில் இருந்து இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.எங்கு பெய்யும்இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாடு நோக்கி நகரும். இதனால் மழை படிப்படியாக அதிகரிக்கும். மழை பெய்து வருகிறது. தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இடியுடன் கூடிய மழைமயிலாடுதுறை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் புயல் காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

No comments:

Post a Comment