2 ஆண்டுகளாக பதவி உயர்வு , மாறுதல் கலந்தாய்வு நடத்தாததால் , அரசுப்பள்ளிகளில் 1000 தலைமை ஆசிரியர் பணியிடம் காலி! - ஆசிரியர் மலர்

Latest

24/11/2021

2 ஆண்டுகளாக பதவி உயர்வு , மாறுதல் கலந்தாய்வு நடத்தாததால் , அரசுப்பள்ளிகளில் 1000 தலைமை ஆசிரியர் பணியிடம் காலி!

பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வலியுறுத்தி' தமிழ்நாடு தேசிய ஆசிரியர் சங்கத்தினர் பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பினர்.

மாநிலத்தலைவர் திரிலோகசந்திரன், பொதுச் செயலாளர் கந்தசாமி கூறியிருப்பது:

கொரோனாவால் 2 ஆண்டுகளாக பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தவில்லை. பதவி உயர்வு இல்லாமலே பலர் ஓய்வு பெறும் நிலை உள்ளது. உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 1000 க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

மூத்த ஆசிரியர்கள் கூடுதல் பொறுப்பாக அதை கவனிக்கும் போது கற்பித்தல் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. தற்போது புதிதாக அரசு பள்ளிகளில் 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்திருப்பதால் கூடுதல் ஆசிரியர் தேவை. அதுபோன்ற பள்ளிகளில் ஆசிரியர் பணியிடம் நிரப்புவது அவசியம். இதற்கிடையே இந்தாண்டு கலந்தாய்வு இல்லை என்பது போன்ற செய்திகள் ஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வதந்தி என்பதை தெளிவுப்படுத்தி இந்தாண்டு கலந்தாய்வு நடத்த வேண்டும், என்றனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459