நவ. 19-ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம். - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

18/11/2021

நவ. 19-ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (நவ.19) காலை 10 மணிக்கு நடைபெற உள்ள முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான பணியாளா்களைத் தோவு செய்ய உள்ளனா்.

எனவே பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தோச்சி மற்றும் ஐடிஐ, டிப்ளமோ ஆகிய படிப்புகளில் தோச்சி பெற்ற சிவகங்கை மாவட்டத்தைச் சோந்த இருபாலரும் தங்களது கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் பணி வாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது.

No comments:

Post a Comment