நடப்பு கல்வி ஆண்டிற்கான 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் புதிதாக 'பயிற்று மொழி'சேர்ப்பு: அரசு தேர்வுத்துறை இயக்குநர். - ஆசிரியர் மலர்

Latest

 




 


22/11/2021

நடப்பு கல்வி ஆண்டிற்கான 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் புதிதாக 'பயிற்று மொழி'சேர்ப்பு: அரசு தேர்வுத்துறை இயக்குநர்.

நடப்பு கல்வி ஆண்டிற்கான 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் புதிதாக பயிற்று மொழி சேர்க்கப்படுகிறது என அரசு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா அறிவித்துள்ளார். 1 முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்கள் எந்த பயிற்று மொழியில் பயின்றனர் என்ற விவரம் வகுப்பு வாரியாக சேர்க்கப்பட உள்ளது என தெரிவித்தார். மாணவர்கள் பயிற்று மொழி விவரங்களை தனித்தனியே இணையத்தளத்தில் பதிவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசுப் பணிகளில் 20% இடஒதுக்கீடு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459