HCL நிறுவனத்தில் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

17/10/2021

HCL நிறுவனத்தில் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு


 எச்சிஎல் டெக்னாலஜிஸ் இந்த ஆண்டு சுமார் 20,000 – 22,000 புதிய பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாக நிர்வாகம் தனது அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

HCL வேலைவாய்ப்பு:

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு முதல் நாட்டின் பல்வேறு துறைகளும் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில் முடங்கியுள்ளது. ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் இணைய சேவைகளின் விளைவால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னணியில் உள்ளது. இந்நிலையில், HCL நிறுவனம் நாடு முழுவதும் புதிதாக 20,000 பேரை பணி நியமனம் செய்வதற்கு முடிவு செய்துள்ளது.

நொய்டாவில் இயங்கும் அலுவலகத்தில் மூத்த மேலாளர்களை வாரத்திற்கு இரண்டு முறையாவது அலுவலகத்திற்கு வர ஊக்குவிக்கத் தொடங்கியதாகவும், தேவையைப் பொறுத்து ஒவ்வொரு பிரிவினரும் வாரத்திற்கு ஒரு முறை அலுவலகத்திற்கு வர ஊக்குவிப்பதாகவும் நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் நிகர சேர்க்கை 11,135 ஆக இருந்தது. இரண்டாம் காலாண்டில் அதன் மொத்த எண்ணிக்கை 1,87,634 ஐ எட்டியது. HCL டெக் தலைமை நிர்வாக அதிகாரி விஜயகுமார் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021


To Join => Whatsappகிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

இந்நிறுவனம் ஜூலையில் தொடங்கி ஒன்பது மாதங்களுக்குப் பிறகு இளநிலை ஊழியர்களுக்கான ஊதிய அதிகரிப்பை அறிவித்தது. மூத்த அதிகாரிகளுக்கு அக்டோபர் 1ம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டு 30,000 புதிய மாணவர்களுக்கு பணி வாய்ப்பு அளிக்க இருப்பதாக நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் மேலும், வருவாய் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும், அதனை இலக்காக கொண்டு செயல்படுவதாகவும் HCL தலைமை மனிதவள அதிகாரி (CHRO) அப்பாராவ் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459