Flash News : 16.10.2021 - சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

13/10/2021

Flash News : 16.10.2021 - சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

பல்வேறு சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் வாரத்தில் 6 நாட்களும் செயல்பட்டு வருவதாகவும் மாணவர்கள் விடுப்பின்றி பள்ளிக்கு வருகை புரிகின்றனர் என்றும் , கணிசமான ஆசிரியர்கள் தங்களது சொந்த மாவட்டங்களிலிருந்து தொலைதூரத்தில் பணிபுரிந்து வருகின்றனர் என்றும் , 14.10.2021 மற்றும் 15.10.2021 ஆகிய இருநாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வார இறுதிநாளான சனிக்கிழமை 16.10.2021 அன்று விடுமுறை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். 


இக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன . மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி 16.10.2021 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459