தமிழகத்தில் பல் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான கலந்தாய்வு – தொடக்கம் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

03/10/2021

தமிழகத்தில் பல் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான கலந்தாய்வு – தொடக்கம்

 

தமிழகத்தில் பல் மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டுள்ளார்.


தரவரிசை பட்டியல்:


தமிழகத்தில் பல் மருத்துவ பட்ட மேற்படிப்பினை தொடர்வதற்காக காத்துக் கொண்டிருந்த மாணவர்களுக்கு இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் டி.எம்.எஸ் வளாகத்தில் தேசிய நல்வாழ்வு குழும ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதிய உயர்விற்கான ஆணை வழங்குதல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவ்விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கலந்துகொண்டுள்ளார். மேலும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்களும் மற்றும் பல துறை அதிகாரிகளும் அவ்விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.


அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் மருத்துவத் துறையில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றிய 28,100 தேசிய நல்வாழ்வு குழும ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதிய உயர்விற்கான ஆணையை வழங்கினார். அதோடு மட்டுமல்லாமல் 2021-2022 ஆம் ஆண்டிற்கான பல் மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலையும் அவர் அவ்விழாவில் வெளியிட்டுள்ளார். மேலும் பல் மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கு மொத்தம் 358 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


அவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் அரசு கல்லூரிகளுக்கு 62 இடங்களும், தனியார் கல்லூரிகளுக்கு 296 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பல் மருத்துவ பட்ட மேற்படிப்பிற்காக மாணவர்களிடம் இருந்து 1,018 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவற்றில் தரவரிசைக்கு 964 விண்ணப்பங்கள் தகுதியுடையதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இதற்கான கலந்தாய்வு நாளை அக்-03 ம் தேதி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment