கல்வி மாவட்ட அளவில் தலைமைஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பூஜ்ஜிய கவுன்சிலிங் - பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை - ஆசிரியர் மலர்

Latest

11/10/2021

கல்வி மாவட்ட அளவில் தலைமைஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பூஜ்ஜிய கவுன்சிலிங் - பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை

 நாளை மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான பூஜ்ஜிய கவுன்சிலிங் நடைபெறவுள்ள நிலையில் அடுத்து தலைமைஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பூஜ்ஜிய கவுன்சிலிங் வரும் நவம்பர் மாதம் முதல் வாரம் நடைபெறலாம் என பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


கல்வி மாவட்ட அளவில் பூஜ்ஜிய கலந்தாய்வு நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடைபெறுவது என்பது கேள்விக் குறியே! இதனால் வெளி மாவட்ட ஆசிரியர்கள் கலந்தாய்வு நடைபெற்றால் தங்கள் மாவட்டதிற்குள் செல்லலாம் என்று இருப்பவர்கள் பெரிதும் பாதிப்படைவார்கள். அவரவர் சொந்த மாவட்டத்திற்குள் செல்ல வாய்ப்பளித்து விட்டு கல்வி மாவட்ட அளவில் பூஜ்ஜய கலந்தாய்வு நடத்தினால் பெரும்பாலோர்க்கு அனுகூலமாக இருக்கும். அரசு இதனை கவனிக்குமா? EMIS மூலமாக பணிமூப்பு அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் என தெரிய வருகிறது. தாங்கள் தற்போது பணிபுரியும் பள்ளியிலேயே மீண்டும்  பணி வாய்ப்பு கிடைப்பது என்பதும் அரிதே. இந்த கலந்தாவிற்கு பிறகு 3 ஆண்டுகளுக்கு பிறகே கலந்தாய்வு நடைபெறும் என தெரிகிறது. 3 ஆண்டுகள் வரை எவ்வித மாறுதல் நடைபெற வாய்ப்பில்லை எனவும் தெரிய வருகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459