பணி மாறுதல் கலந்தாய்வில் புதிய நடைமுறையினை கைவிட ஆசிரியர் கூட்டணி கோரிக்கை! - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

10/10/2021

பணி மாறுதல் கலந்தாய்வில் புதிய நடைமுறையினை கைவிட ஆசிரியர் கூட்டணி கோரிக்கை!

 பணி மாறுதல் கலந்தாய்வில் புதிய நடைமுறையினை கைவிட வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

கைவிட கோரிக்கை :

தமிழகத்தில் சிறந்த நிர்வாகத்தினை வழங்கிவரும் தங்களுக்கு எங்களது நன்றியினையும் , வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். மதிப்புமிகு பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களால் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான மாறுதல் கலந்தாய்வு 12.10.2021 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான இடமாறுதலை வெளிப்படைத் தன்மையோடு கலந்தாய்வு முறையில் நடத்த முன்வந்துள்ள ஆணையரின் நடவடிக்கைகளை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் வரவேற்கிறோம். அதேநேரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களையும் காலிப்பணியிடங்களாக கருதப்பட்டு பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த புதிய நடைமுறை , கலந்தாய்வு என்ற பெயரில் செயல்படுத்தப்படும் கட்டாயப் பணி மாறுதல் நிகழ்வாகவே கருதப்படுகிறது. இது எதிர்காலத்தில் தவறான முன்னுதாரனமாக அமைந்துவிடும்.


இந்த நடவடிக்கை , கலந்தாய்வு என்ற இனிப்பை காட்டி , கையில் இருப்பதை பறிக்கும் நடவடிக்கையாக கருதப்பட்டுவிடும். எனவே , அனைத்து பணியிடமும் , காலிப்பணியிடம் என்ற புதிய நடைமுறையை கைவிட்டு தற்போது இருக்கும் காலிப் பணியிடங்களின் அடிப்படையிலேயே கலந்தாய்வு பணி மாறுதல் நடத்த வேண்டும் என மிக்க பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment