அரசுப்பள்ளி ஆசிரியருக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு பாராட்டுக் கடிதம் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

18/10/2021

அரசுப்பள்ளி ஆசிரியருக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு பாராட்டுக் கடிதம்

sirkazhi.JPG?w=360&dpr=3

நடமாடும் ஸ்மார்ட் டிவி மூலம் மாணவர் இல்லங்களுக்கே சென்று பாடம் நடத்தும் ஆசிரியருக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு பாராட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.


சீர்காழி ஒன்றியம் கீழச் சட்டநாதபுரம் ஊராட்சி நிம்மேலி நெப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சு.சீனிவாசன் மாணவர் இல்லங்களுக்கு தெருத் தெருவாய் சென்று நடமாடும் இணைய வசதி, ஸ்பீக்கர் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் டிவி மூலம் தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியை ஒளிபரப்பு செய்து பாடம் நடத்தி வருகிறார்.


வீடுவீடாகச் சென்று பாடம் நடத்தும் பள்ளி ஆசிரியர்!


தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களிலும் இச்செய்தி பரவி பல்வேறு தரப்பினரும் தொலைபேசி மூலமாகவும், வாட்ஸ்அப் மூலமாகவும், கடிதம் மூலமாகவும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


தலைமைச் செயலாளரின் பாராட்டுக் கடிதம்

WhatsApp_Image_2021-10-17_at_2.21_.18_PM_.jpeg?w=360&dpr=3

இந்நிலையில்  ஆசிரியர் சு.சீனிவாசனின் கல்விச்சேவை பற்றி அறிந்த தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு  ஆசிரியர் சு.சீனிவாசனை பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். அந்தப் பாராட்டு கடிதம் நேற்று தபால் மூலம் அவரது இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தலைமைச் செயலர் பாராட்டு மேலும் உற்சாகமும், ஊக்கமும் ஏற்படுத்துவதாக ஆசிரியர் சீனிவாசன் தெரிவித்தார்.


ஆசிரியர்  சு.சீனிவாசனுக்கு சீர்காழி வட்டாரக் கல்வி அலுவலர்கள் பூவராகன், லெட்சுமி, பள்ளித் துணை ஆய்வர் செளந்திரராஜன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் புகழேந்தி, பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்டாலின், ஆசிரியர்கள், பிற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர். கீழச் சட்டநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் துரைராஜ் தலைமையில் துணைத்தலைவர் சுதாகர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கூடி பாராட்டு தெரிவித்தனர்.No comments:

Post a Comment