செவிலியர் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

28/10/2021

செவிலியர் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்


தமிழ்நாட்டில் 2021-2022ம் கல்வி ஆண்டில், மருத்துவம் சார்ந்த படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்க உள்ளது. இதையடுத்து, பிஎஸ்சி (செவிலியர்), செவித்திறன் பேச்சு மற் றும் மொழி நோய்க்குறியியல் பட்டப்படிப்பு, பிபிடி, பிஎஸ்இ ரேடியோ கிராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பிஎஸ்சி ரேடியோ தெரபி டெக் னாலஜி, பிஎஸ்சி கார் டியோ பல்மனரி பர்பியூ ஷன் டெக்னாலஜி, பிஎஸ்சி மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜி, பிஎஸ்சி ரெஸ்பயரேட்டரி தெரபி, பிஓடி, பிஆப்டம், பிஎஸ்சி நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜி, பிஎஸ்சி கிளினிக் கல் நியூட்ரிஷியன் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

இதையடுத்து இதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து அச்சுப் படி எடுத்து விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் தகவல் தொகுப் பேடுகளை 

https://tnhealth.tn.gov.in/  

http://www.tnmedicalselection.org/

தொடங்கும் நாள் அக்டோபர் 25-ம் தேதி, இணைய தள விண்ணப்பங்களை பதிவு செய்ய கடைசி நாள் நவம்பர் 8-ம் தேதி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 10-ம் தேதி ஆகும்.

No comments:

Post a Comment