ஊரக புத்தாக்க திட்ட அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் – திருப்பூர் - ஆசிரியர் மலர்

Latest

 




30/10/2021

ஊரக புத்தாக்க திட்ட அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் – திருப்பூர்

 திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தில் ஓரிடம் சேவை மையத்தில் தொழில் முனைவு வளர்ச்சி அலுவலர், தொழில் முனைவு நிதி அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிகளுக்கு ஏதாவது ஒரு பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் போதிய அறிவுடன், 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும், தொழில் முனைவோருக்கான தகுதிகள் பெற்றிருப்பதுடன், ஊரக தொழில்கள், நிறுவன வளர்ச்சி மற்றும் நிதி பெறுதல் போன்றவற்றில் அனுபவம் இருக்க வேண்டும். பெண்கள் மற்றும் நலிவுற்றோர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதில் மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம், பயணப்படி ரூ.1,000, ஊக்கத் தொகை 5 சதவீதம் ஊதிய அடிப்படையில் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆகவே மாவட்டத்தில் தகுதியான நபர்கள் மாவட்ட மேலாண்மை அலகு, தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம், பல்லடம் மெயின் ரோடு, ஆரம்ப சுகாதார நிலையம் அருகில், அருள்புரம், திருப்பூர் என்ற மாவட்ட அலுவலகத்தில் நேரடியாகவே அல்லது பதிவு மூலமாகவோ நவம்பர் 15-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459