பென்ஷன் வாங்குவோர் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான கால வரம்பு நவம்பர் 30ஆம் தேதி வரையில் நீட்டிக்கபட்டுள்ளது. இப்போது எளிதாக வீட்டில் இருந்தபடியே ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.
பென்ஷன்:
இந்தியாவில் ஓய்வு பெரும் ஊழியர்களுக்கு பணி காலத்திற்கு பிறகு உதவும் மாதந்தோறும் பென்ஷன் தொகை வழங்கப்டுகிறது. இந்த தொகை அவர்களது வயது முதிர்ந்த காலத்தில் பேருதவி புரிகிறது. வேலையை விட்டு நின்ற பின் பொருளாதார ரீதியாக யாருடைய உதவியும் இல்லாமல் அரசு வழங்கும் பென்ஷன் தொகை மூலம் வாழ்க்கையை நடத்தலாம்.
பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியமாகும். ஆயுள் சான்றிதழை சமர்ப்பித்தல் தற்போது எளிய ஒன்றாக மாறி விட்டது. போஸ்ட் ஆபீஸ் மூலமாக ஆயுள் சான்றிதழை சமர்பிக்கலாம். தபால்காரர்கள் வீடு தேடி வந்து ஆயுள் சான்றிதழை வாங்கி செல்வார்கள். மேலும் வங்கிகளும் இந்த சேவையை வழங்கி வருகிறது. doorstepbanks.com அல்லது www.dsb.imfast.co.in/doorstep/login என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பது மூலம் வங்கி அதிகாரி நீங்கள் சொன்ன தேதியில் உங்களை தேடி வந்து ஆயுள் சான்றிதழை ஜீவன் பிரமான் ஆப் மூலமாகப் பெற்றுச் செல்வார்.
மேலும் Doorstep Banking மொபைல் ஆப்பையும் பயன்படுத்தி ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம். மேலும் விவரனாகிலு 18001213721 மற்றும் 18001037188 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். இந்தாண்டு ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தனியா முறையாக செய்திருந்தால் தான் பென்ஷன் தொகை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment