பள்ளி மாணவர்கள் திறனறித்தேர்வை தமிழில் நடத்த கோரிக்கை.. மத்திய அரசு பதில்! - ஆசிரியர் மலர்

Latest

 




31/10/2021

பள்ளி மாணவர்கள் திறனறித்தேர்வை தமிழில் நடத்த கோரிக்கை.. மத்திய அரசு பதில்!

 சென்னை: பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான ஆன்லைன் திறனறித் தேர்வினை மாநில மொழிகளிலும் நடத்தக்கோரி மதுரை எம்பி சு.வெங்கடேசன் எழுதியிருந்த கடிதத்திற்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளித்துள்ளார்.' மதுரை எம்பி சு.வெங்கடேசன் சில தினங்களுக்கு முன், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்குக்கு கடிதம் ஒன்று எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் 'கிஷோர் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா () என்கிற திட்டத்தின் அடிப்படையில் அறிவியல் முனைப்புள்ள மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.மாணவர்கள் என்ன செய்வார்கள்?+1 , +2 மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட்டு உதவித் தொகை(ரூ 80,000 இல் இருந்து ரூ 1,12,000) வழங்கப்டுகிறது. ஆனால் திறனறித் தேர்வு இரண்டு மொழிகளில் வினாத்தாள் கொண்டதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி மட்டுமே. மாநில மொழிகளில் +1, +2 கல்வி பயிலும் மாணவர்கள் என்ன செய்வார்கள்?மாநில மொழியில் தேர்வு வேண்டும்இந்தியில் எழுதலாம். ஆனால் தமிழில் எழுத முடியாது என்றால் அது சமதள ஆடுகளத்தை எப்படி உறுதி செய்யும்? அறிவியல் முனைப்பிற்கும் ஆங்கிலம், இந்திக்கு என்ன சம்பந்தம்? ஆகவே அரசு மாநில மொழிகளிலும் வினாத் தாள்களுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். மாநில மொழியில் தேர்வு நடத்த வேண்டும்' என்று கூறியிருந்தார்.வாக்குமூலமாக தெரிவிக்கப்படும்இந்த நிலையில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் எழுதியிருந்த கடிதத்திற்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. இது தொடர்பாக பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், இது குறித்து வழக்கு நிலுவையில் இருப்பதால் மத்திய அரசின் நிலை உயர்நீதிமன்றத்தில் வாக்குமூலமாக தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.நீதி தருவதாக இருக்கட்டும்இதனை தனது டுவிட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ள சு.வெங்கடேசன் எம்.பி, 'அறிவியல் முனைப்புக்கும் ஹிந்திக்கும் என்ன தொடர்பு? -மாணவர் உதவித் தொகைக்கான ஆன்லைன் தேர்வை தமிழிலும் நடத்த கடிதம் எழுதியிருந்தேன். எனது கோரிக்கையை பரிசீலித்ததாகவும், வழக்கு இருப்பதால் அரசின் நிலை வாக்குமூலமாக உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் தெரிதித்துள்ளார். அரசின் பதில் தமிழக மாணவர்களுக்கு நீதி தருவதாக இருக்கட்டும் என்று கூறியுள்ளார்

NTSE EXAM ANOUNSMENT CLICK HERE- 2021


தேசிய திறனாய்வு தேர்வு : study materials : CLICK HERE

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459