மூட்டுவலிக்கு சிறந்த பாட்டி வைத்தியம் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

22/09/2021

மூட்டுவலிக்கு சிறந்த பாட்டி வைத்தியம்

 

பெரும்பாலும் 55 வயதைத் தாண்டியப் பெண்களிடம் காணப்படும் மூட்டு வலிக்குக் காரணம், முதுமையை அடையும்போது, எலும்புகளின் முனைகளை மூடியுள்ள குருத்தெலும்புகள் தேய்ந்து முற்றிலும் அரிக்கப்படும்.


இந்த நிலையில் எலும்புகள் ஒன்றோடு ஒன்று உராய்வதால் ஏற்படும் பிரச்னையே மூட்டுவலியாகும்.


மூட்டுவலிக்கு முக்கிய காரணங்களாக பரம்பரை, அதிக உடல் எடை, அதிக நேரம் சம்மணமிட்டு உட்கார்ந்து இருத்தல், சத்தான உணவுகளை உண்ணாமல் இருத்தல், எலும்பு முறிவு போன்றவற்றால் மூட்டு வலிக்கு வரக்காரணமாகும். இதற்கு எளிய முறை தீர்வு எமது முன்னோர்கள் கையாண்ட எளிய முறையினை நாமும் கையாளுவோமாக..


வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு மூட்டில் நன்கு தேய்த்தால் வலி குறையும்.


விளக்கெண்ணையை அடுப்பில் வைத்து சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை சாப்பிட வேண்டும்.


பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்

சிற்றாமணக்கு இலையை விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கிக் கட்டலாம்.


சுக்கை, எலுமிச்சை பழச்சாறு விட்டு அரைத்துப் பத்துப் போடலாம்.


குப்பைமேனி இலையுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைத்துப் பத்துப் போடலாம்.

சதகுப்பை விதையை அவித்து, பின் சதகுப்பை வேருடன் சேர்த்து அரைத்துப் பத்துப் போடலாம்.

நீர்ப்பிரம்பி இலையை விளக்கெண்ணெயில் வதக்கிக் கட்டலாம்.


கருஞ்சீரகத்தை நீர்விட்டு அரைத்துப் பூசலாம்.


ஊமத்தை இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கிக் கட்டலாம்.


ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.


இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி தேன், ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினம் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

No comments:

Post a Comment