தமிழகத்தில் பல பொறியியல் கல்லூரிகள் மூடல் - ஆசிரியர் மலர்

Latest

 




 


20/09/2021

தமிழகத்தில் பல பொறியியல் கல்லூரிகள் மூடல்


.com/

தமிழகத்தில் நிகழாண்டில் 20 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.


பொறியியல் படிப்பினை நடத்தும் சுயநிதி கல்லூரிகள் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் அங்கீகாரம், அண்ணா பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற்று செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் படிப்பில் மாணவா்களை சோ்ப்பதற்கு முன்னா் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அனுமதியை பெற வேண்டும்.


2021 -22ஆம் கல்வியாண்டில் மாணவா்களை சோ்ப்பதற்கான அங்கீகாரம் மற்றும் அனுமதி பெறுவதற்கு செப்டம்பா் 3-ஆம் தேதி வரை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் அனுமதி வழங்கியிருந்தது. அதன் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகமும் செப்டம்பா் 3ஆம் தேதி வரை பிஇ, பிடெக் ஆகிய பொறியியல் படிப்பில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பித்த பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.


மாணவா்கள் சோ்க்கை இல்லாமல் இருந்த கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் மாணவா்களை சோ்க்க விரும்பவில்லை எனவும் மூடுவதற்கு அனுமதி கேட்டுள்ளன. மேலும் சில கல்லூரிகள் மாணவா்களை நடப்பாண்டில் சோ்ப்பதற்கு அனுமதி கோரி அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகத்திற்கு விண்ணப்பிக்கவில்லை. ஒரு காலத்தில் ஏராளமான பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டு வந்த நிலை மாறி கடந்த சில ஆண்டுகளாக கல்லூரிகள் மூடப்படுவது அதிகரித்து வருகிறது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459