முதல்வரின் தனிப்பிரிவில் மனு எவ்வாறு அளிக்க வேண்டும் - அரசு அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

26/09/2021

முதல்வரின் தனிப்பிரிவில் மனு எவ்வாறு அளிக்க வேண்டும் - அரசு அறிவிப்பு

 

IMG_20210926_183356

முதல்வரின் தனிப்பிரிவில் அளிக்கப்படும் பெரும் பாலான மனுக்கள் ஒரு குறிப்பிட்ட படிவத்தில்தான் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு அளிக்கப்பட வேண்டும் என்ற தவறான வதந்தி மக்களிடையே சில தனிப்பட்ட நபர்களால் பரப்பப்பட்டு வருவதாகவும் , அதை நம்பி மனுக்களை அளிக்க வரும் பெரும்பாலான பொதுமக் கள் குறிப்பிட்ட படிவங்களை பணம் கொடுத்து வாங்கி மனுக்களை அளித்து வருவதாகவும் செய்திகள் அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. முதல்வரின் தனிப்பிரிவில் மனுக்களை அளிக்க எவ்வித குறிப்பிட்ட படிவமும் அரசால் பரிந்துரைக்கப்பட வில்லை.


மேலும் , மனுக்களை அளிக்க வரும் பொதுமக் கள் , ஒரு வெள்ளைத்தாளில் தங்கள் கோரிக்கைகளை எழுதி தேவைப்படின் உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அளித்தாலே போதுமானது. முதலமைச்சரின் தனிப்பிரிவில் பல்வேறு வழிகளில் பெறப்படும் ( தபால் / இணையதளம் 

www.cmcell.tn.gov.in / முதலமைச்சர் உதவி மையம் ( cmhelp line.tnega.org ) மற்றும் மின்னஞ்சல் ( cmcell@tn.gov.in ) அனைத்து மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க ஒரே மாதிரியான நடைமுறையே பின்பற்றப்படும்

No comments:

Post a Comment