46 மாணவ, மாணவியருக்கு கொரோனா தொற்று: மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல் - ஆசிரியர் மலர்

Latest

16/09/2021

46 மாணவ, மாணவியருக்கு கொரோனா தொற்று: மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்

 


கோவை, சரவணம்பட்டி அருகே தனியார் நர்சிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கேரள மாநிலத்திலிருந்து ஏராளமான மாணவர்கள் வந்து விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.


இந்த நிலையில், அக்கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இதர மாணவர்களுக்கும் நேற்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


அந்த பரிசோதனையில் ஏற்கனவே தொற்று பாதித்திருந்த கேரள மாணவர்களுடன் தொடர்பிலிருந்த 46 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், அக்கல்லூரிக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே, மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பெரும்பாலான கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகளிலும் மாநகராட்சி சார்பில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கோவை மாவட்ட பள்ளிகளில் இதுவரை 10 மாணவர்கள், ஒரு ஆசிரியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது சோமனூர் மற்றும் இருகூர் அரசு பள்ளிகளில் பயிலும் தலா ஒரு மாணவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.


எனவே மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459