ஓதுவார் பயிற்சிப்பள்ளியில், 3 ஆண்டுக்கால சான்றிதழ் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

28/09/2021

ஓதுவார் பயிற்சிப்பள்ளியில், 3 ஆண்டுக்கால சான்றிதழ் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு.

 

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் சார்பாக நடத்தப்படும் ஓதுவார் பயிற்சிப்பள்ளியில், 3 ஆண்டுக்கால சான்றிதழ் படிப்பில் சேர அக்.27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. தேர்வாகும் மாணவர்களுக்கு இலவச உணவு, இருப்பிடம், உடை, ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 20 வயதுக்குள் உள்ள குரல் வளம், உடல் வளம் உடையவர்கள், சமய தீட்சை பெற்றவர்கள், சமய கோட்பாடுகளை கடைப்பிடிப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

குதியானவர்கள் அக்.27ம் தேதிக்குள் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் செயல் அலுவலருக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது

No comments:

Post a Comment