நீட் தேர்வு எழுதியவர்களுக்கு மனநல ஆலோசனை': 104 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

நீட் தேர்வு எழுதியவர்களுக்கு மனநல ஆலோசனை': 104 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்

 


neet_sucide.jpg?w=360&dpr=3

நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் தொலைபேசி வாயிலாக மனநல ஆலோசனை வழங்கப்படும் என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


நீட் தேர்வு பயத்தால் தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், இன்று அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி, தோல்வி பயத்தில் தற்கொலை செய்துகொண்டார்.


சென்னையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் தொலைபேசி வாயிலாக மனநல ஆலோசனை வழங்கப்படும் என்று கூறினார்.


மேலும், 104 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசுவதன் மூலம் மாணவர்களுக்கு உரிய உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார். 


தமிழக சட்டப்பேரவையில் நேற்று நிறைவேறப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்றும், பின்னர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் குறிப்பிட்ட அவர், 


நீட் தேர்விலிருந்து விலக்கு பெற தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

No comments:

Post a Comment