ITI படிப்பு, உதவித் தொகையுடன் அப்ரண்டிஸ் பயிற்சி... - ஆசிரியர் மலர்

Latest

05/08/2021

ITI படிப்பு, உதவித் தொகையுடன் அப்ரண்டிஸ் பயிற்சி...

 நெய்வேலி: நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் ஐ.டி.ஐ. படிப்பு மற்றும் உதவித் தொகையுடன் அப்ரண்டிஸ் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன.




மத்திய அரசின் நவரத்னா நிறுவனங்களில் ஒன்று என்.எல்.சி. இந்நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருந்து தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன.


Fitter freshe/ Electrician fresher - பயிற்சி இடங்கள் 20 +20 - பயிற்சி காலம் 24 மாதம்- மாத உதவித் தொகை (முதலாம் ஆண்டு ரூ 8766; 2-ம் ஆண்டு 10,019) கல்வித் தகுதி: 2019/20/21-ல் பத்தாம் வகுப்பு தேர்ச்சி



NLC invites application For ITI Courses and Apprentices 

Welder fresher/Medical Lab Technician Pathology/Medical Lab Technician Radiology- பயிற்சி இடங்கள் 20 +10 +5 - பயிற்சி காலம் (Welder 15 மாதம்- இதர 15- மாத உதவித் தொகை (முதலாம் ஆண்டு ரூ 8766; 2-ம் ஆண்டு 10,019) கல்வித் தகுதி: 12-ம் வகுப்பு (Biology/Science Group)


வயது வரம்பு: 01.06.2001 அன்று 14 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். இதற்கு முன் இப்பயிற்சி பெற்றவர்கள் அல்லது தற்போது பயிற்சியில் இருப்பவர்கள் மீண்டும் பயிற்சி பெற தேவை இல்லை.




வரும் ஆக. 9-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை  https://www.nlcindia.in/  இணையதளத்தில் ஆன்லைன் ரெஜிஸ்டிரேசன் படிவத்தை நிரப்பி பிரிட் எடுத்துக் கொள்ள வேண்டும்


.Fitter fresher/ Electrician fresher/ Welder fresher- க்கு விண்ணப்பிப்போர் 2019/2020-ம் ஆண்டு 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்/ 2021-ம் ஆண்டு 9-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்/ டி.சி/ ஜாதி சான்றிதழ்/ ஆகியவற்றின் நகல்களுடன் இணைத்து ஆக. 23-ந் தேதி மாலை 5 மணிக்குள் கீழ் காணும் முகவரிக்கு நேரிலோ அஞ்சலிலோ அனுப்பி வைக்க வேண்டும்.




முகவரி: பொதுமேலாளர், கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம், என்.எல்.சி. இந்தியா நிறுவனம், வட்டம்-20; நெய்வேலி- 607803.




குறிப்பு: என்.எல்.சி.க்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு தனி இடஒதுக்கீடு உள்ளது; அதேபோல் இந்திய அரசு நிறுவனம் என்பதால் ஓபிசி சான்றிதழ் கட்டாயம் தேவை.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459