அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது நிறைவேற்றப்படும்? - பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தகவல்! - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது நிறைவேற்றப்படும்? - பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தகவல்!

 


SdS

தமிழக அரசின் நிதி நிலைமையை நினைத்தால் அச்சமாக உள்ளது என்று, தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.


இன்று நடைபெற்ற சட்டப்பேரவை பட்ஜெட் மீதான பதில் உரையில் தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவிக்கையில், 


"பல விவகாரங்களில் முடிவெடுக்க முடியவில்லை. தமிழக அரசின் நிதிநிலைமை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. பழைய பென்ஷன் திட்டத்தை நிறைவேற்ற முடியாதுயாதற்கு இந்த நிதி சூழல் தான் காரணம்.


அகவிலைப்படியை உயர்த்த வேண்டும். ஆனால், நிதி சூழல் மந்த நிலையில் இருக்கிறது என்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது உரையில் தெரிவித்துள்ளார். 


இதில், பழைய ஓய்வூதிய (பென்ஷன்) திட்டத்தை நிறைவேற்ற முடியாத சூழல் என்று அமைச்சர் தியாகராஜன் தெரிவித்திருப்பதால், தற்போதைக்கு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை என்று தெரிகிறது.


அதாவது, திமுகவின் தேர்தல் வாக்குறுதியை தற்போது நிறைவேற்ற முடியாது என்று நிதி அமைச்சர் தெரிவித்து உள்ளார். 


இன்னும் புரியின்படி சொல்லவேண்டுமானால், திமுக தனது தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது. ஆனால், தற்போதைய நிதி சூழல் காரணமாக அதை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உள்ளதாக தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.


ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி இந்த வருடம் இல்லை என்று தெரிவித்த நிலையில், தற்போது பழைய பென்சன் திட்டமும் கொண்டுவர முடியாத சூழ் உள்ளதாக தெரிவித்திருப்பது, தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

1 comment:

  1. ,உங்களுக்குத் ஓட்டு போட்டாதுக்கு இன்னும் என்னலாம் பன்னுவிங்களோ......எடபாடி பரவல்ல....

    ReplyDelete