அரசு ஊழியர்களின் சொந்த வீடு கனவு – எளிமையாக லோன் பெறும் வழிமுறைகள்!அரசு ஊழியர்களின் சொந்த வீடு கனவு – எளிமையாக லோன் பெறும் வழிமுறைகள்! - ஆசிரியர் மலர்

Latest

09/08/2021

அரசு ஊழியர்களின் சொந்த வீடு கனவு – எளிமையாக லோன் பெறும் வழிமுறைகள்!அரசு ஊழியர்களின் சொந்த வீடு கனவு – எளிமையாக லோன் பெறும் வழிமுறைகள்!

 

.com/

தமிழகத்தில் அரசு பணியாளர்களுக்கு என்று வங்கிகளில் வீடு வாங்க, வீடு கட்ட போன்ற காரணங்களுக்காக நிதி உதவி வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் வீடு வாங்குவதற்கும் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் பற்றி இப்பதிவில் ககாண்போம்.


அரசு ஊழியர்களுக்கு முன்பணம் :


சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது பலரின் கனவாக இருந்து வருகிறது. அதற்கான வங்கிகளில் வீட்டு கடன் உதவி வழங்கப்படுகிறது. இதற்கு பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது. கடன் உதவி பெறுபவர்கள் வட்டி விகித அடிப்படையில் மாதந்தோறும் கடனை தவணை முறையில் செலுத்துகின்றனர். தமிழகத்தில் அரசு ஊழியர்கள் வீடு வாங்குவதற்கு அல்லது புது வீடு கட்டுவதற்கு வங்கிகள் கடன் உதவி அளிக்கிறது.


அரசு ஊழியர்கள் என்ற அங்கீகாரத்தை வைத்து எளிதில் வீடு கட்ட அல்லது வாங்க எளிதாக முன் பணம் பெறலாம் இது குறித்து பலருக்கும் தெரிவதில்லை. ஆவணங்களை எடுத்துக்கொண்டு வங்கிகளுக்கு செல்கின்றனர். அங்கு ஏராளமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு முன் பணம் அல்லது கடன் தவணை கிடைக்க வெகு நாட்கள் ஆகிறது. இதற்கு தீர்வாக அரசு ஊழியர்களுக்கு வங்கிகளில் வீடு வாங்க மற்றும் வீடு கட்ட முன்பணம் வழங்கப்படுகிறது.


அரசு ஊழியர்கள் வீடு கட்ட கடன் அல்லது முன் பணம் பெற எந்த மாவட்டத்தில் முன் பணம் பெற விரும்புகிறீர்களோ அந்த மாவட்ட ஆட்சியரிடம் இருந்து முதலில் அனுமதி கடிதம் பெற வேண்டும். இதன் மூலம் வீட்டுவசதித் துறை சார்பாக அகில இந்திய சேவைப்பிரிவு அதிகாரிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு 40 லட்சம் முதல் 60 லட்சம் வரை முன் பணம் வழங்கபடுகிறது மற்ற அரசு அலுவலர்களுக்கு 25 லட்சம் முதல் 40 லட்சம் வரை முன் பணம் பெறலாம். இதன் மூலமாக எளிதில் பணம் பெற்று தன மூலமாக தங்களது கனவு வீட்டினை கட்டி விடலாம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459