தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு; ஹால்டிக்கெட் வெளியீடு. - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு; ஹால்டிக்கெட் வெளியீடு.

 


.com/

செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


’’நடைபெறவுள்ள செப்டம்பர் 2021 தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் முதலாம் ஆண்டு தேர்வுகள் 03.09.2021 முதல் 22.09.2021 வரையிலும் இரண்டாம் ஆண்டு தேர்வுகள் 02.09.2021 முதல் 21.09.2021 வரையிலும் நடைபெறவுள்ளது.

இத்தேர்விற்கு விண்ணப்பித்திருக்கும் தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) அனைவரும் http://www.dge.tn.gov.in/  என்ற இணையதளம் மூலம் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து 25.08.2021 பிற்பகல் 2.00 மணி முதல் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.

பதிவிறக்கம் செய்யும் முறை

http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தோன்றும் DEE EXAM SEPTEMBER 2021 – PRIVATE CANDIDATE – hall ticket DOWNLOAD என்பதை க்ளிக் செய்தால் தோன்றும் பக்கத்தில் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்’’.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment