பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது நல்லதுதான்.. ஆனால் .....கல்வியாளர் கருத்து - ஆசிரியர் மலர்

Latest

25/08/2021

பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது நல்லதுதான்.. ஆனால் .....கல்வியாளர் கருத்து

 சென்னை: பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறப்பது நல்ல விஷயம்தான். ஆனால் கவனமாக இருக்க வேண்டும் என கல்வியாளர் ராஜன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ஒன் இந்தியா தமிழுக்கு கல்வியாளர் ராஜன் அளித்த சிறப்பு பேட்டியில் கூறுகையில், பள்ளிகளையும் கல்லூரிகளையும் திறப்பதற்கான முடிவை எடுத்தது மிகவும் வரவேற்கத்தக்கது. இத்தனை நாட்களாக பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் கல்வி நிலையங்களுக்கும் செல்ல முடியாமல் ஆன்லைன் மூலம் வகுப்பை கவனித்து வந்தனர்.விளையாட்டு, கேளிக்கை உள்ளிட்டவை இல்லாமல் இருந்த நிலையில் பள்ளிகள் திறப்பு என்பது மிக மிக வரவேற்கத்தக்க ஒன்று. மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் எல்லாம் சிறப்பாக வகுக்கப்பட்டுள்ளன. இவையெல்லாமும் இருந்தாலும் கொரோனா என்பதற்கு மருந்து கிடையாது. தடுப்பூசி மட்டுமே உள்ளது.மாணவர்கள்ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்கள். அவர்கள் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எந்த உணவுகளை சாப்பிட வேண்டும், அவர்கள் அன்றாடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். தங்களது உடல்நலத்தை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் என்கிற அறிவுறுத்தல் தற்போது மாணவர்களுக்கு தேவை. இது பெற்றோர்களும் செய்ய வேண்டும்.தற்போது பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு ஆலோசகர்கள், மருத்துவர்கள் தினமும் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் வந்து மாணவர்கள் உடல்நலத்தை எவ்வாறு பார்த்துக் கொள்ள வேண்டும். எதுமாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும்? பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை அன்றாடம் கவனிக்க வேண்டியது மிக மிக முக்கியமானதொன்று.கொரோனா 3ஆவது அலைஉலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி கொரோனா 3ஆவது அலை வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வருகின்றன. ஒரு வேளை பள்ளிக்கோ கல்லூரிக்கோ வரும் மாணவர்களுக்கு அவர்களுக்கே தெரியாமல் கொரோனா அறிகுறி இருந்தால் மருத்துவர்களையும் பெற்றோரையும் நிர்வாகத்தினர் அணுகி அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும். மாணவர்கள்மேலும் அந்த தொற்று மற்றவர்களை பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். கொரோனா வந்தால் அதை கண்டு மாணவர்கள் பயப்படாதவாறு அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும். கொரோனா 3ஆவது அலையை காரணம் காட்டி பள்ளிகளையும் கல்லூரிகளையும் தொடர்ந்து நடத்தாமல் இருக்கவும் இயலாது. அதே வேளையில் ஒவ்வொரு மாணவர்களுடைய உடல்நலம் என்பது மிக மிக மிக முக்கியமானதாகும். மாணவர்களின் உடல்நலனை பெற்றோர் கவனிக்க வேண்டும். பிள்ளைகளுக்கு சளி இருந்தால் கூட மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல வேண்டுமே தவிர தன்னிச்சையாக மருந்து கடைகளில் மருந்தை வாங்கி கொடுக்கக் கூடாது என ராஜன் தெரிவித்துள்ளார்..

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459