G. O. NO:160 FINANCE (Salaries) DEPARTMENT Dated: 29-06-2021 தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இன்று முதல் நடைமுறை - ஆசிரியர் மலர்

Latest

01/07/2021

G. O. NO:160 FINANCE (Salaries) DEPARTMENT Dated: 29-06-2021 தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இன்று முதல் நடைமுறை

 


தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

G. O. NO:160 FINANCE (Salaries) DEPARTMENT Dated: 29-06-2021

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு செய்துகொண்டுள்ள உடன்படிக்கையின்படி புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இன்று முதல் 2025 ஜூன் 30 வரை 4 ஆண்டுக் காலத்துக்கு நடைமுறையில் இருக்கும்.


திட்டத்தில் இணைந்துள்ள ஆயிரத்து 169 மருத்துவமனைகளில் 203 வகையான சிகிச்சைகளுக்குக் காப்பீடு வழங்கப்படும். மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் வரை காப்பீட்டுத் தொகை மூலம் சிகிச்சை பெறலாம்.


அரிய வகைச் சிகிச்சைகள், அறுவைச் சிகிச்சைகள் தேவைப்படுவோர் ஆண்டுக்கு 10 லட்ச ரூபாய் வரை காப்பீட்டுத் தொகை மூலம் சிகிச்சை பெறலாம்.


இதற்காக அரசு ஊழியர்களிடம் மாதந்தோறும் 300 ரூபாய் பிடிக்கப்படும். ஒப்பந்த ஊழியர்களுக்கு இந்தக் காப்பீட்டுத் திட்டம் பொருந்தாது.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459