நாட்டின் முதல், 'டிஜிட்டல்' பல்கலைக் கழகம் துவக்கம் : மாணவர்கள் வேலை பார்த்து கொண்டே படிப்பை மேற்கொள்ள வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


09/07/2021

நாட்டின் முதல், 'டிஜிட்டல்' பல்கலைக் கழகம் துவக்கம் : மாணவர்கள் வேலை பார்த்து கொண்டே படிப்பை மேற்கொள்ள வாய்ப்பு

 


கேரளாவில் உள்ள, நாட்டின் முதல், 'டிஜிட்டல்' பல்கலையில் படிக்க, மாணவர்கள் இடையே அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.


கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. திருவனந்தபுரத்தில், நாட்டின் முதல் டிஜிட்டல் பல்கலை துவக்கப்பட்டுள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக மையம், டிஜிட்டல் பல்கலையாக மாற்றப்பட்டுள்ளது.இந்த பல்கலையின் முதல் கல்வியாண்டு துவங்கியுள்ளது. முதல்கட்டமாக, பிஎச்.டி., எனப்படும் ஆராய்ச்சி படிப்பில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 


மொத்தமுள்ள 30 இடங்களுக்கு, 500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.வேலை பார்த்து கொண்டே ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் வாய்ப்பு இங்கு வழங்கப்படுகிறது. இது, தகவல் தொழில் நுட்பத் துறையில் பணியாற்றுவோருக்கு மிகப் பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு உட்பட நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்த இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் பட்டப் படிப்புகளும் இங்கு நடத்தப்பட உள்ளன.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459