மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு. - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

14/07/2021

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு.

 


gallerye_15472041_2802320

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்காக அகவிலைப்படி 17 ல் இருந்து 28 % ஆக அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறியுள்ளார்.
IMG-20210714-WA0010கோவிட் பரவலை தொடர்ந்து, கடந்தாண்டு, ஜனவரி முதல், 2021 ஜூலை 1 வரையிலான மூன்று தவணைகளுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்த அகவிலைப் படி உயர்வும், ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரண தொகை உயர்வும், நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வை 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தவும், இதனை ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளதாக, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நிருபர்களிடம் தெரிவித்தார்

No comments:

Post a Comment