ஆண்களுக்கு புற்றுநோய் வரபோவதற்கான அறிகுறிகள் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

25/07/2021

ஆண்களுக்கு புற்றுநோய் வரபோவதற்கான அறிகுறிகள்

   புற்றுநோய் என்பது இன்றைய தலைமுறையினரை அச்சுறுத்தி கொண்டிருக்கும் ஒரு அரக்கனாகும். புற்றுநோயால் சிறு பாதிப்புகளில் இருந்து தொடங்கி உயிரிழப்பு வரை கூட ஏற்படலாம். பரபரப்பான வாழ்க்கை முறை, மோசமான உணவு பழக்கவழக்கம், புகைபிடித்தல், மது அருந்துதல் என புற்றுநோய் ஏற்பட பல காரணங்கள் உள்ளது. ஆனால் புகை பிடிக்காதவர்கள், சீரான உணவு பழக்கவழக்கம் உள்ளவர்கள் கூட புற்றுநோயால் பாதிக்கப்படுவதுதான் கொடுமையான ஒன்று.

Cancer

புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து விட்டால் குணப்படுத்துவது சுலபம் அஜாக்கிரதையாக விட்டால் இறுதியில் மரணம்தான் பரிசாக கிடைக்கும். புற்றுநோய் அறிகுறிகளை பலரும் அலட்சியமாக விட காரணம் இதன் அறிகுறிகள் மற்ற நோயின் அறிகுறிகளை போலவே இருப்பதுதான். எனவே உடலில் எந்தவித மாற்றங்கள் ஏற்பட்டாலும் அதனை அலட்சியமாக கருதாமல் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசிப்பது நல்லது. இங்கே கூறப்படும் அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகவும். ஏனென்றால் இவை அனைத்தும் நீங்கள் சாதரணமாக எண்ணி அலட்சியமாக கருதக்கூடிய அறிகுறிகள்.

Stomatitis

வாய்ப்புண்

பனியால் ஏற்படக்கூடிய வாய்ப்புண் விரைவில் குணமடைந்துவிடும் அல்லது ஒருமுறை மருத்துவரிடம் சென்று வந்தால் போதும் குணமடைந்துவிடும். ஆனால் நீண்ட நாளாகியும் சரியாகாத வாய்ப்புண்களோ, நாக்கு அல்லது ஈறுகளில் சிவப்பு நிற தடிப்புகளோ அல்லது தாடையை சுற்றிய பகுதிகளில் உணர்வின்மையோ இருப்பின் அவை வாய்ப்புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். புகை பிடிப்பவர்களுக்கோ அல்லது பான் பொருட்களை வாயில் போட்டு மெல்லுபவர்க்ளுக்கோ வாய் புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த பழக்கம் உள்ளவர்கள் இதில் ஏதேனும் ஒரு அறிகுறி இருந்தாலும் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

Weight Loss

எடை குறைதல்

எடை குறைதல் என்பது மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய அறிகுறியாகும். எந்த காரணமும் இன்றி உடல் எடை ஐந்து கிலோக்கலுக்கு மேல் குறைந்தால் நிச்சயம் அது புற்றுநோய்க்கான அறிகுறியாகும். ஒருவேளை நீங்கள் உடற்பயிற்சி செய்பவராக இருந்தாலும் அதிக எடை இழப்பை உணரும்போது உடனடியாக புற்றுநோய் பரிசோதனை செய்துபார்க்கவும். இது பெரும்பாலும் கணையம், வயிறு மற்றும் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாகும்.

Urinery Problem

சிறுநீர் கழித்தலில் சிரமம்

சிறுநீர் கழித்தலில் சிரமம், சிறுநீர் அல்லது விந்தணுக்களுடன் இரத்தம் சேர்ந்து வருதல் அல்லது விறைப்புத்தன்மை தொடர்பான பிரச்சினைகளை நீங்கள் சந்தித்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து பாருங்கள். இவை புரோஸ்டேட் புற்றுநோய் அறிகுறிகளாக இருக்கலாம். துரதிர்ஷ்டவசமாக, புரோஸ்டேட் புற்றுநோய்க்கு தீவிரமடைந்த பின்பே அறிகுறிகளை அறிய இயலும். இருப்பினும், இந்த அறிகுறிகள் இருக்கும்போதே பரிசோதித்து பார்ப்பது பெரிய ஆபத்திலிருந்து உங்களை பாதுகாக்கும்.

Skin problem

தோலில் ஏற்படும் மாற்றங்கள்

பெண்களை காட்டிலும் ஆண்கள் அதிக அளவு தோல் புற்றுநோய்க்கு ஆளாகிறார்கள். காரணம், பெண்களை விட ஆண்கள் அதிகளவு வெயிலில் இருக்கிறார்கள் மேலும் பெண்களை போல ஆண்களுக்கு சூரிய ஒளியை தாங்கும் அளவிற்கு தலைமுடி இல்லை. சருமத்தில் ஒரு பகுதி மட்டும் கருத்து, வீங்கி மேலே எழுந்தால் உடனடியாக தோல் மருத்துவரை அணுகவும்.
இது மெலோனமா என்றழைக்கப்படும் தோல் புற்றுநோயின் அறிகுறியாகும்.

Continues Cough

இருமல்

சளி அல்லது மற்ற ஒவ்வாமைகளால் ஏற்படும் இருமல் மூன்று வாரங்களுக்கு மேல் நிலைத்திருக்காது. ஒருவேளை மூன்று வாரமாகியும் உங்களுக்கு இருமல் நிற்கவில்லை என்றால் அது நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாகும். அது மட்டுமின்றி இருமும்போது இரத்தம் வந்தால் சற்றும் தாமதிக்கக்கூடாது. அதேபோல் மார்பு மற்றும் தோள்பட்டையில் தொடர்ச்சியாக வலி இருப்பதும் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள்தான்.

Blood in Pee

மலத்தில் இரத்தம்

இது ஹேமர்ஹாய்ட்ஸ் அல்லது அதைவிட அதிக தீங்கானதாக இருக்கும். பெரும்பாலும் இது குடல் புற்றுநோய்க்கான அறிகுறியாகும். இது 50 வயதை கடந்தவர்களுக்குத்தான் ஏற்படும் என்ற கருத்து உள்ளது ஆனால் இப்பொழுது இளைஞர்களும் இந்த நோயால் பாதிக்கப்பட தொடங்கிவிட்டனர். இதனை மலச்சிக்கல் என நாம் அலட்சியமாக விட வாய்ப்புகள் அதிகம் ஆனால் இந்த அலட்சியம் உங்கள் உயிரையே பறிக்கக்கூடும்.

Tired

சோர்வு

நாம் மிகவும் அலட்சியமாக விட்டுவிடும் அறிகுறி இதுவாகும். காரணம் சோர்வு என்பது அனைவருக்கும் எளிதில் ஏற்படக்கூடியது. நாம் வேலைப்பளு காரணமாக சோர்வடைந்திருக்கிறோம் என எண்ணுவோம் ஆனால் காரணமற்ற ஓய்வு புற்றுநோயின் அறிகுறியாக கூட இருக்கலாம். இது சில சமயம் லூக்கோமியாவாக இருக்கலாம் அல்லது வயிற்றில் ஏற்படும் புற்றுநோயாகவும் இருக்கலாம்.

Stomach Pain

வயிற்றுவலி

செரிமானத்தில் பிரச்சினை இருந்தால் வயிறு அதிகமாக வலித்தால் அதனை அஜீரணம் என விட்டுவிட வேண்டாம். அது குடல், வயிறு, கணைய புற்றுநோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம். இது சாதாரண அல்சராகவும் இருக்க வாய்ப்புள்ளது ஆனால் அதனை சோதனை செய்து உறுதி செய்வதே உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.

Fever

காய்ச்சல்

காலநிலை மாறும்போது காய்ச்சல் ஏற்படுவது சகஜம்தான் என்று நினைத்துவிடாதீர்கள். இரத்த புற்றுநோய் உடலில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகமாக உற்பத்தி செய்து நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும். எனவே நமக்கு எளிதில் அலர்ஜிகள் மற்றும் காய்ச்சல் ஏற்படலாம்.
திடீரென காய்ச்சல் வந்தால் உடனடியாக சோதனை செய்து பார்த்துக்கொள்ளவும். அது இரத்த புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

முடிந்தளவு தீய பழக்கங்களை குறைத்து கொண்டு, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு தொடர்ச்சியாக மருத்துவர்களை ஆலோசித்தாலே போதும் புற்றுநோயிலிருந்து எளிதில் தப்பிவிடலாம்

No comments:

Post a Comment